ட்விட்டரை மறு வடிவமைக்கும் ஒரு பகுதியாக ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் தளத்தை வாங்கியவுடன் எலான் மஸ்க் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். எலான் மஸ்க்கும் தனது ட்விட்டரில், ஒரு வழியாக பறவை இப்போது விடுவிக்கப்பட்டது என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பாரக் அகர்வாலை அவர் பணி நீக்கம் செய்தார். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தியை எலான் மஸ்க் அறிவிக்கவில்லை. தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பலரை நீக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய ஊழியர்களின் பட்டியலை உடனடியாக தயார் செய்ய எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.