அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கிய நிலையை எட்டியுள்ளது. தற்போது பென்சில்வேனியாவில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் அங்கு டிரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது பைடன் 6 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பென்சில்வேனியா மாநிலத்தில் 20 தேர்வு மையங்கள் உள்ளது. ஜார்ஜியாவை தொடர்ந்து பென்சில்வேனியாவிலும் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரிய ட்ரம்ப் தரப்பின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்த நிலையில், மாநில நிர்வாகமே ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த முறை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக ஒரு மாநிலத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடக்கவிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால் அதிபர் தேர்தலின் முடிவு வெளியாவதில் காலதாமதம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.