Published on 22/03/2025 | Edited on 22/03/2025

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி நெல்லை, தூத்துக்குடி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. அதிகாலை முதலே தூத்துக்குடியின் திரேஸ்புரம், முத்தையாபுரம், தாளமுத்து நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. சில இடங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.