
பெருங்களத்தூரில் சைக்கோ நபர் ஒருவர் சுற்றுவதாக தகவல் பரவ, அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் கண்காணிப்புக்காக சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பெருங்களத்தூர் 58வது வார்டு திருவள்ளுவர் தெரு, புத்தர் நகர் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. அவர் சைக்கோ நபர் என்று கூறப்படும் நிலையில் அவரது நடமாட்டம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் அந்த சைக்கோ நபரை பிடிப்பதற்காக இரவு முழுவதும் கையில் கம்பு, கோலுடன் தெருத்தெருவாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட பகுதி அருகே முட்புதர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், அதனை அகற்றியும் சைக்கோ நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.