Published on 10/05/2019 | Edited on 10/05/2019
ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள கியுஷு தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டது. மியாசகி பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 8.48 க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் இதனால் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.