இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜாவா தீவில் இருந்து 93 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடல்பகுதியில் 59 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜாவா தீவில் உள்ள வீடுகள் லேசாக குலுங்கின.
வீடுகள் குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர். எனினும், இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று இந்தோனேசிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் கடல்பகுதியில் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடவில்லை.