Published on 03/12/2019 | Edited on 03/12/2019
ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும் ஆப்பிள் ரகம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 20 வருடங்கள் ஆராய்ச்சி செய்யப்பட்டு இந்த புதிய வகை ஆப்பிள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது ‘ஹனிகிரிஸ்ப்’, ‘எண்டர்ப்ரைஸ்’ ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது. இந்த ஆப்பிள் ஆராய்ச்சிக்காக இந்திய மதிப்பில் ரூ.72 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதை சரியான முறையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப்பட்டது முதல், 10 முதல் 12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் வைத்திருந்து சாப்பிட முடியும் என்கின்றனர் இதனை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்.