இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
படாங் நகரிலிருந்து மேற்காக 114 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், கடலுக்கு அடியில் 23 மைல் ஆழத்தில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரம் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.