Skip to main content

துபாயில், ஓட்டுநர் இல்லாத ஹோவர் டாக்சியின் சோதனை ஓட்டம்

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
துபாயில், ஓட்டுநர் இல்லாத ஹோவர் டாக்சியின் சோதனை ஓட்டம் 

ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ள தானியங்கி ஹோவர் டாக்சி, பார்ப்பதற்கு சிறிய ஹெலிகாப்டரை போன்று காட்சியளிக்கிறது. இதன் சோதனை ஓட்டம், துபாயில் வெற்றிகரமாக நடைபெற்றது. அந்நாட்டு இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது தொடங்கி வைத்தார். மனிதர்கள் இல்லாமல், 200 மீட்டர் உயரத்தில் சுமார் 5 நிமிடம் பறக்க விடப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. இதுதான், உலகின் முதல் ட்ரோன் டாக்சி என்ற பெருமையை தட்டி சென்றுள்ளது. இரண்டு பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஹோவர் டாக்சியில், 9 பேட்டரிகளுடன், 2 பாராசூட்டுகளும் உள்ளன. ரிமோட் உதவியின்றி 100 கிலோ மீட்டர் வேகத்தில் 30 நிமிடம் வரை பறக்கும் வகையில் ஹோவர் டாக்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்