கனடா நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மித் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கனடாவின் பர்னபி தெற்கு தொகுதியிலிருந்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த மாதம் தேர்வானார். இதன்மூலம் கனடா அரசியல் வரலாற்றிலேயே ஒரு இந்திய எம்.பி முதன்முறையாக எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளது இதுவே முதல் முறை. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
![jagmeet](http://image.nakkheeran.in/cdn/farfuture/rPUJA1OAJPUJdqVFxMol4hZH7jaVmb4aAF_KbVeBxrE/1553163682/sites/default/files/inline-images/Jagmeet-Singh-std.jpg)
இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய கனடா நாடாளுமன்ற கூட்டத்தில் இவர் தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது, "எதிர்க்கட்சி தலைவரானதில் மிகவும் மகிழ்ச்சி. கடந்த வாரம் நியூஸிலாந்து மசூதிகளில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 49 இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தாருக்கு எங்களது ஆறுதல்களை தெரிவிக்கிறோம். மேலும் தெற்குபர்னபி நகரில் உள்ள மக்களுக்கு போதுமான குடியிருப்பு வசதிகள் இல்லை. எனவே அவர்களுக்குத் தேவையான வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு அரசு 5 லட்சம் வீடுகளைக் கட்டித் தர உறுதி அளிக்குமா” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜக்மித் சிங்குக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு. அவரின் கோரிக்கை கண்டிப்பாக பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.