புதுக்கோட்டை நமுனை ரயில் நிலையத்தை மூடும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதன்கிழமையன்று நமுனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நமுனை கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், எஸ்.பொன்னுச்சாமி, சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், சி.ஜீவானந்தம் துரை.நாராயணன், ரயில்வே பென்சனர் சங்க செயலாளர் எம்.வீரமணி, தலைவர் பி.கருப்பையா உள்ளிட்டோர் பேசினர்.
நமுனை ரயில் நிலையத்தை மூடும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களுக்கும் பயணச் சீட்டு வழங்க வேண்டும். மானாமதுரை, புதுக்கோட்டை ரயில் மார்க்கத்தில் புதிய தொடர்வண்டிகள் இயக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன. கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.அடைக்கப்பன், எம்.மாயாண்டி, ஆர்.வி.ராமையா, ஆவுடைமுத்து, அடைக்கப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.