Skip to main content

ஒரு நாளுக்கு 39; ஆட்சிக்காலத்தில் 30ஆயிரம் - பொய்யாக கூறித்தள்ளிய ட்ரம்ப்!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

donald trump

 

முன்னாள் அமெரிக்க பிரதமர் டொனால்ட் ட்ரம்ப், தன் ஆட்சி காலத்தில், 30,573 பொய்யான அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய செய்திகளைத் தெரிவித்துள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

 

இந்த 30 ஆயிரம் பொய்களில், பாதிக்கும் மேற்ப்பட்ட பொய்களை அவர் தனது பதவியின் இறுதியாண்டில் கூறியுள்ளார். பதவியேற்ற முதல் வருடத்தில், ஒரு நாளைக்கு 6 பொய்களையும், இரண்டாம் வருடத்தில் ஒருநாளைக்கு 16 பொய்களையும், மூன்றாம் வருடத்தில் ஒரு நாளைக்கு 22 பொய்களையும் சராசரியாக கூறியுள்ள ட்ரம்ப், இறுதியாண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 39 பொய்களைத் தெரிவித்துள்ளார்.

 

முதல் 10 ஆயிரம் பொய்களைக் கூற ட்ரம்பிற்கு 27 மாதங்கள் எடுத்துள்ளது. அடுத்த 10 ஆயிரம் பொய்களை 14 மாதத்தில் கூறிய ட்ரம்ப், கடைசி 10 ஆயிரம் பொய்களை ஐந்து மாதங்களுக்கு குறைவான காலத்தில் கூறி மிரளவைத்துள்ளார்.

 

"உலகின் சிறந்த பொருளாதாரத்தை நாம் கட்டமைக்கிறோம்" என்பதே ட்ரம்ப் அதிக முறை கூறிய பொய்யாகும். ட்ரம்ப் இந்தப் பொய்யை 493 முறை கூறியுள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கூறியுள்ளது. ட்ரம்பின் பொய்களையும் அதற்கான ஆதாரங்களையும் ஒரு தனி 'டேட்டாபேஸாக (database) உருவாக்கியுள்ள வாஷிங்டன் பத்திரிகை, அதனை பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வரி என பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்