உலகம் முழுவதும் கரோனா தொற்றின் 2ஆம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சற்று குறைந்துவரும் வேளையில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கிட்டதட்ட 70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க, நேற்று (20.09.2021) ஒரேநாளில் உலகளவில் 3,88,178 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5,560 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 47.11 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 22.97 கோடி பேர் இந்த தொற்று காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 20.64 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர். 1,86,37,273 பேர் சிகிச்சையில் இருந்துவருகிறார்கள்.
தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் நேற்று 74,199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு தொற்று எண்ணிக்கை சிறிய அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 618 பேர் நாடு முழுவதும் பலியாகியுள்ளனர். 4.30 கோடி பேர் இதுவரை அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டதட்ட 7 லட்சம் உயிரிழப்புகள் இந்த தொற்று காரணமாக ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது.