Skip to main content

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு கரோனா

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Corona to former US President Obama!

 

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு கரோனா இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 

 

இது குறித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கடந்த சில நாட்களாக தொண்டையில் வலி இருந்ததால், கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில், கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நலமுடன் இருக்கிறேன். மிச்சல் ஒபாமா கரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டுள்ளார். பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார். அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. 

 

கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்தாலும், நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை என்றால், விரைவில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்" என்று பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒபாமாவின் பேச்சுக்கு காங்கிரஸே காரணம்” - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

Nirmala Sitharaman condemns Obama's speech on PM Modi

 

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.

 

அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார்.  அதே நேரத்தில் அமெரிக்க ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் அதிபர் ஒபாமா, “எனக்கு பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருப்பேன்” எனக் கூறியுள்ளார். இதற்கு பாகஜவினர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த காலத்தில் இந்தியா மீது இதுபோன்ற புகார்களை எழுப்பியது யார் என்பதனை உற்றுநோக்க வேண்டியது அவசியம். ஒபாமா ஆட்சிக் காலத்தில் தான் ஏமன், சிரியா, சவுதி, ஈராக் என 6 இஸ்லாமிய நாடுகள் மீது குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறினார். இந்தியாவை குறைகூறும் ஒபாமாவை அமெரிக்க மக்கள் எப்படி நம்புவார்கள். அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவை தக்கவைத்துக்கொள்ள நினைக்கும் சூழலில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் கருத்தும் வியப்பைத் தருகிறது. பிரதமர் மோடிக்கு 13 நாடுகள் இதுவரை அந்நாட்டின் உயரிய விருதை அளித்து கௌரவித்துள்ளது. அதில் 6 இஸ்லாமிய நாடுகளும் அடங்கும். பாஜகவை தேர்தலில் வீழ்த்த முடியாததால், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் அடிப்படை ஆதாரமற்ற தரவுகளை வெளிநாடுகளில் பேசி வருவதே ஒபாமா போன்றவர்களின் கருத்துகளுக்குக் காரணம்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

Next Story

“இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும்” - ஒபாமா

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

The issue Obama wants to discuss with PM Modi; A viral video

 

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, பின் ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.

 

அமெரிக்கப் பயணத்திட்டத்தின் படி நேற்று  வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். அதன்பின் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

 

இதற்கு சற்று முன்னதாக பராக் ஒபாமா தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி  அளித்தார். அதில்,  மோடியுடன் உரையாடினால், இந்தியாவில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் குறித்தும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் ஆலோசிப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி அளித்தார். இந்த பேட்டி பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரது செய்தியாளர் சந்திப்பிற்கு சற்று முன் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அப்போது இது குறித்து பேசிய அவர், பிரதமர் மோடியை எனக்கு நன்றாக தெரியும். அவருடன் நான் உரையாடினால் உரையாடலின் ஒரு பகுதி, ‘இந்தியாவில் உள்ள சிறுபான்மை இனமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகும்’ என்பது குறித்தானதாக இருக்கும். இந்து மக்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் சிறும்பான்மையினரின் பாதுகாப்பு முக்கியமான ஒன்று. ஜோ பைடன், பிரதமர் மோடியுடனான தனது உரையாடலில் இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம் சிறும்பான்மையின மக்களின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும்”  என தெரிவித்துள்ளார். ஒபாமா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இணைய வாசிகள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.