Skip to main content

சிறை தண்டனை உறுதியானதும் விஷம் அருந்தி உயிரிழந்த போர்க்குற்றவாளி!

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
சிறை தண்டனை உறுதியானதும் விஷம் அருந்தி உயிரிழந்த போர்க்குற்றவாளி!

நீதிபதி சிறைதண்டனை வழங்கிய உடன், நீதிமன்றத்திலேயே விஷம் குடித்த போர்க்குற்றவாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.



1992 -1995 காலகட்டத்தில் நடைபெற்ற போஸ்னியன் - குரோட் யுத்தத்தின்போது, போர்க்குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக முன்னாள் யூக்கோஸ்லேவியாவைச் சேர்ந்த ஸ்லோபோடன் பிரல்ஜக் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தக் குற்றத்தின் மீதான இறுதி விசாரணை நெதர்லாந்தின் ஹேக் பகுதியில் உள்ள ஐநாவின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் தண்டனைக்குரியவர்கள் என அறிவித்த நீதிபதி, 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்லோபோடன் பிரல்ஜக், தான் ஒரு போர்க்குற்றவாளி அல்ல எனக் கூறி, தன் கையில் வைத்திருந்த விஷத்தை அருந்தினார். இதனால், வழக்கு விசாரணை உடனடியாக நிறுத்தப்பட்டு, பிரல்ஜக் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சிக் காட்சிகள் கேமராவில் பதிவாகி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சார்ந்த செய்திகள்