கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல் கருத்துகளை பேசுவதை தவிர்க்க வேண்டும் மற்றும் அரசியல் கருத்து பேசும் விழாக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குநனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கல்லூரியில் நடைபெறும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளர்கள் தங்களது கட்சி அல்லது இயக்கம் சார்ந்த கொள்கைகளை பேசி வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் எனவே மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மை பாதிக்கப்படுகிறது. கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் அரசியல் கட்சிகளின் கொள்கை மற்றும் கருத்துக்களை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் அதுமட்டுமின்றி அவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும் எனவும் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் வலியுறுத்தியுள்ளது.