பாலியல் பலாத்காரம் செய்ய வந்த திருடனிடம் தனக்கு கொரோனா இருப்பதாக கூறி பெண் ஒருவர் தப்பித்த சம்பவம் சீனாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சீனாவில் வூகான்நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நகரம் ஜிங்ஷான். அங்குள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடன் ஒருவன் கொள்ளையடிக்க முயன்றுள்ளான். கொள்ளை முயற்சியில் அவர் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டில் இளம் பெண் ஒருவர் இருப்பதை பார்த்துள்ளார். இதனால் கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்த பெண் அவரிடம் இருந்து தப்புவதற்கு என் செய்வதென்று புரியாமல் யோசித்த அவர், திடீரென தனக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக கூறி கடுமையாக இருமி பொய் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அவர் திருடுவதை கூட மறந்துவிட்டு வீட்டை விட்டு தெறித்து ஓடியுள்ளார்.