உலக நாடுகளுக்கு கரோனாவை விநியோகித்து, பெரும் அழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சீனா, இப்போது இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் மண்ணாசையை விடாமல், இந்திய எல்லைப் பகுதியில், போர் வெறி மூலம் உயிர்ப்பலியையும் பதட்டத்தையும் உருவாக்கி வருகிறது.
ஆதிக்க மனோபாவம் கொண்ட சீனாவை அது விளையாடிய கரோனாவைக் கொண்டே மறுபடியும் செக் வைக்கத் தொடங்கியிருக்கிறது இயற்கை. கரோனாவை முற்றிலும் எங்கள் மண்ணில் இருந்து ஒழித்துவிட்டோம் என்ற படி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய சீனாவை, மறுபடியும் ‘ரீ எண்ட்ரி’ கொடுத்து அதிரவைத்துக்கொண்டுடிருக்கிறது கொலைகார கரோனா.
பெய்ஜிங்கில் இருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் 31 பேருக்கு கரோனாத் தொற்று ஏற்பட்டதால், அந்தப் பகுதியையே முதலில் சீல்வைத்தனர். இதைத் தொடர்ந்து, அரண்டுபோன சீனா, பெய்ஜிங் விமான நிலையத்தில் இருந்து பறக்கும் தனது 1,200 விமானங்களையும் முதலில் நிறுத்திவிட்டது.
பள்ளி, கல்லூரிகளையும் அது உடனடியாக மூடிவிட்டது. பல இடங்களிலும் மக்கள் நடமாட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. 11 சந்தைகளும் அங்குள்ள குளிர்பானத் தொழிற்சாலைகளும் கூட மூடப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன.