Published on 04/01/2022 | Edited on 04/01/2022
லடாக்கின் பாங்காங் ஏரி மீது சீனா பாலம் கட்டுவது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புவி நுண்ணறிவியல் ஆய்வாளரான டேமியன் சைமன் என்பவர் ஒரு சாட்டிலைட் புகைப்படம் ஒன்றை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தில் லடாக்கின் எல்லைக்கோட்டில் இருந்து சுமார் 40 கிலோமிட்டர் தொலைவில் உள்ள பாங்காங் ஏரியில் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கு வகையில் பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது. குர்நாப் என்ற அந்த இடத்தில் கட்டப்பட்டுவரும் இந்தப் பலத்தால் சீனா ராணுவ வீரர்களையும், வாகனங்களையும் விரைவாகக் குவிக்க முடியும் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.