சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவியுள்ளது. சுமார் 14,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் சூழலில், 350 க்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் குறித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் அமெரிக்கா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அந்த அறிக்கையில், "புதியவகை கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனாவின் நடவடிக்கையை பெரும்பாலான நாடுகள் பாராட்டியுள்ளன. அதேநேரம், சீன மக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு உலக நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அவர்களின் முடிவுக்கு மதிப்பளிக்கிறோம். ஆனால், கரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்கா பயத்தை பரப்புகிறதே தவிர, அதனை கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை எங்களுக்கு அளிப்பதில் தோற்றுவிட்டது" என தெரிவித்துள்ளது.