Skip to main content

கொரோனா தாக்குதல்: 106 பேர் உயிழப்பு

Published on 28/01/2020 | Edited on 28/01/2020
c


 

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் காய்ச்சல் சீனாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.  


நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா தாக்குதலால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 1300 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வுகான் நகரம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

நேற்று நிலவரப்படி கொரோனா வைரசுக்கு 80 பேர் பலியாகியிருந்தனர். மேலும் 26 பேர் பலியானதையடுத்து, இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்