பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சரும், முன்னாள் இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் உட்கட்சியில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, நேற்று முன்தினம் (08/07/2022) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அடுத்த பிரதமரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலையில், ஆளும் கான்சர்வேட்டிவ் கட்சி உள்ளது. இந்த நிலையில், பிரதமர் பதவிக்கு தானும் போட்டியிடவுள்ளதாக கட்சியிடம் ரிஷி சுனாக் முறைப்படி அறிவித்துள்ளார்.
கட்சிக்குள் தனக்கு ஆதரவைத் திரட்ட 'Ready For Rishi' என்ற பெயரில் ட்விட்டரில் பரப்புரையும் தொடங்கியுள்ளார். அது தொடர்பான வீடியோவில் ரிஷி சுனாக்கின் இந்திய முன்னோர்களினின் படமும் இடம் பெற்றுள்ளது. பிரிட்டனை சரியான பாதையில் வழி நடத்தி பொருளாதாரத்தைக் கட்டமைக்கப் போவதாக 'ரிஷி சுனாக்' உறுதியளித்துள்ளார்.
தனது குடும்பமே தனது வாழ்க்கை என்றும், அது தனது மனதில் விதைத்த கனவுகளை நனவாக்க பிரிட்டன் துணை நின்றதாகவும் ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார்.