கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில்: அமெரிக்கா வெற்றி
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் எல்ஜிஎம் -30 ஜி மினிடெமான் III என்னும் கண்டம் விட்டு கண்டத்தை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விமானப் படை அறிவித்துள்ளது. 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.