Published on 05/02/2019 | Edited on 05/02/2019
ரோஹிங்கிய அகதிகள் அதிக அளவில் உள்ள வங்கதேசத்தின் டெக்நாப் அகதிகள் முகாமை பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி பார்வையிட்டார். ஐ.நா சபையின் அகதிகள் நலமுகமை செயலாளராக உள்ள நடிகை ஏஞ்சலீனா ஜோலி நேற்று வங்கதேசம் வந்தடைந்தார். அதனை தொடர்ந்து டெக்நாப் அகதிகள் முகமை பார்வையிட்டார். மேலும் இன்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களை பார்வையிட உள்ளார். உலகிலேயே மிக பெரிய அகதிகள் முகாமான குடுப்பாலோங் முகாமை இன்று பார்வையிட உள்ளார். ஐ.நா சபை ரொஹிங்கியாக்களுக்கு உதவும் வகையில் சுமார் 920 மில்லியன் டாலர்கள் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டவரைவு தயாரிக்கும் பணி நிமித்தமாகவே ஏஞ்சலினா ஜோலி வங்கதேச சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். வங்கதேசத்தில் சுமார் 7,60,000 ரோஹிங்கிய அகதிகள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.