அமெரிக்கா மக்களையும் அவர்களின் வேலை வாய்ப்பைகளையும் உறுதிச் செய்யும் வகையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைளை எடுத்து வருகிறார். இதில் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் அமெரிக்கா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் தர வேண்டும் என அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதே போல் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை படிப்படியாக குறைத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஹெச் 1 பி விசாவின் கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா அரசு முடிவு எடுத்துள்ளதாக அந்நாட்டு தொழிற்துறை அமைச்சர் அலெக்சாண்டர் அகோஸ்டா தெரிவித்துள்ளார். இருப்பினும் எவ்வளவு சதவீதம் கட்டணம் உயரும் என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.
இந்த விசா கட்டண உயர்வால் இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர் என்றே கூறலாம். ஏனெனில் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அதே போல் இந்தியாவில் உள்ள அமெரிக்காவின் முன்னணி ஐடி நிறுவனமான சிடிஎஸ் (COGNIZANT- 'CTS') நிறுவனம் அமெரிக்கா அரசு எடுத்த முடிவால் பொருளாதார ரீதியிலாக அதிக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்படுள்ளது. மேலும் ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்தினால் இந்திய ,சீனா உட்பட பல வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்காவில் வந்து பணிபுரிவது குறையும் எனவும், அமெரிக்கா இளைஞர்கள் அதிகளவில் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்பதால் டிரம்ப் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்காவின் தொழிற்துறை அமைச்சர் அலெக்சாண்டர் அகோஸ்டா தெரிவித்தார்.
இது வரை அமெரிக்காவில் சுமார் 6.5 லட்சம் பேர் ஹெச்1பி விசாக்களை பெற்று பணிபுரிந்து வருவதாக அகோஸ்டா தெரிவித்துள்ளார். அதே போல் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் பேருக்கு ஹெச்1பி விசா வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா இளைஞர்கள் தகவல் தொழில் நுட்ப துறையில் சிறந்து விளங்கும் வகையில் அமெரிக்கா அரசு ரூபாய் 15 கோடி டாலர் செலவில் 'அப்ரெண்டிஸ் திட்டத்தை' செயல்படுத்த உள்ளதாக அகோஸ்டா தெரிவித்தார். இதில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு சுமார் 35% இருக்கும் எனவும் , எதிர்காலத்தில் அமெரிக்கா இளைஞர்களை கொண்டு அமெரிக்கா நிறுவனங்கள் இயங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த விசா மாற்றத்தால் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.