அமெரிக்காவில் விமான உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் போயிங் ஆகும் . இந்த போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் எனும் ரகத்தை சேர்ந்த இரு விமானங்கள் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளாகி சுமார் 346 பேர் உயிரிழந்தனர். ஒரே மாதிரியான தொழில் நுட்ப கோளாறு காரணமாகவே இரு விபத்துகளும் ஏற்பட்டுள்ளனர். இதனால் இந்த வகை 737 மேக்ஸ் விமானத்தை வாங்க யாரும் முன் வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இந்த ரக போயிங் விமானத்தை இயக்க பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் ஏப்ரல் மாத கணக்கின் படி போயிங் விமானங்களை வாங்க யாருமே முன் வரவில்லை என்றும் போயிங் நிறுவன தயாரிப்பின் 737 மேக்ஸ் ஜெட்ஸ், 777 ரக விமானங்கள் , 787 ட்ரீம்லைனர் உள்ளிட்ட முன்னணி வகை விமானங்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை . இதனால் போயிங் விமான நிறுவனம் வர்த்தகத்தில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இருப்பினும் அமெரிக்கா அரசுக்கு தேவையான ஹெலிகாப்டர்களை தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.