செல்போனுக்கு வரும் அழைப்புகளை பதிவு செய்வதை நிறுத்த பிரபல நிறுவனமான ட்ரூகாலர் திட்டமிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள புதிய விதிகளுக்கு பிறகு உலகம் முழுவதும் செல்போனுக்கு வரும் அழைப்புகளை பதிவு செய்வதை நிறுத்த முடிவை ட்ரூகாலர் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் செல்போன் அழைப்புகளை பதிவு செய்யும் முறையை தடுக்க கூகுள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் வரும் மே 11 ஆம் தேதி முதல் கூகுள் பிளே ஸ்டோரில் செல்போன் அழைப்புகளை பதிவு செய்யும் ஆண்ட்ரைடு செயலிகளை கூகுள் தடை செய்யும். எனவே பயனாளர்கள் செல்போன் அழைப்பை பதிவு (ரெக்கார்ட்) செய்ய விரும்பினால் ஸ்மார்ட் போனில் உள்ள ரெக்கார்டிங் வசதியை மட்டுமே பயன்படுத்த முடியும். ஸ்மார்ட் போனில் உள்ளமைக்கப்பட்ட ரெக்கார்டிங் வசதி இல்லையென்றால் மே 11 க்கு பிறகு கால் ரெக்கார்டிங் செய்ய முடியாது. கூகுளின் இந்த விதியை பின்பற்றி ட்ரூ காலர் இந்த முடிவை எடுத்துள்ளது.