Skip to main content

ஒரு டீ-யின் விலை 13,000 ரூபாய்..! அப்படி என்ன ஸ்பெஷல் இதில்..?

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு டீ 13,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

 

13000 rupees worth tea selling in london

 

 

இங்கிலாந்தின்  பக்கிங்கம் அரண்மனைக்கு எதிரே 'தி ரூபென்ஸ்' என்ற ஹோட்டல் இயங்கிவருகிறது. இந்த ஹோட்டலில் தான் இந்த ஸ்பெஷல் டீ விற்கப்படுகிறது. அதேபோல இது தான் அந்த நாட்டிலேயே காஸ்டலியான டீ விற்கும் இடமாகவும் இருக்கிறது. இங்கு ஒரு கப் டீ 200 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 13,800 ரூபாய்.

இலங்கையிலிருந்து பிரத்தியேகமாக தேயிலை இலைகள் கொண்டுவரப்பட்டு, வெல்வெட் துணிகளில் போட்டு உலர்த்தப்பட்ட இந்த டீ தயாரிக்கப்படுகிறது. மேலும் பக்கிங்கம் அரண்மனையின் அழகை ரசித்தபடியே இங்கு அமர்ந்து டீ அருந்தலாம் என்பதே இதன் தனிச்சிறப்பு. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு வெள்ளி குவளைகளில் மட்டுமே டீ வழங்கப்படும். இப்படி பல காரணங்களால் தங்களது பணத்தை செலவு செய்து அங்கு தினமும் பலர் டீ அருந்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்