பாகிஸ்தானில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1033 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆங்காங்கு பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சுமார் வீடுகளை இழந்த 3 கோடிக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1033 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 119 பேர் இறந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேசிய பேரிடர் மீட்புப்பணி மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பலரும் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமீரம் உதவிகளை வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக ஆசியா கோப்பையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.