ரஷ்யா, உக்ரைன் மீது ஒருவாரமாக கடும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடல் பகுதியிலிருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை வீசி தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தைக் கைப்பற்றியதாகக் கூறியுள்ளது.
இந்நிலையில் உக்ரைனுக்கான வெளிவிவகார அமைச்சகம் இந்த தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், " இந்த தாக்குதலில் இதுவரை 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 46 விமானங்கள், 999 கவச வாகனங்கள், 68 ஹெலிகாப்டர்கள், 290 பீரங்கிகள், 117 நீண்ட தொலைவைத் தாக்கும் அதிநவீன பீரங்கிகள், 50 ராக்கெட் லாஞ்சர்கள், 454 வாகனங்கள், 7 ஆளில்லா விமானங்கள், 60 பதுங்கு குழிகள் மற்றும் 23 விமான அழிப்புக்கான போர் சாதனங்கள் இதுவரை அழிக்கப்பட்டுள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவொருபுறம் இருக்க ரஷ்யத் தரப்பில் தெரிவிக்கப்படும் உயிரிழப்பு எண்ணிக்கைக்கும், உக்ரைன் கூறும் பலி எண்ணிக்கைக்கும், பெரிய அளவில் வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.