அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தோனேசியா தீவு 10 இன்ச் தூரம் நகர்ந்துள்ளதாக நாசா கண்டறிந்துள்ளது.
இந்தோனேசியாவிலுள்ள லம்போக் மற்றும் பாலி தீவுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, தெற்கு கலிமண்டன், தென்கிழக்கு மடுரா, கிழக்கு ஜாவா ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. லாம்போக் நகரில் 80 சதவீத கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே போல் ஜிலி தீவிலும் பாதிப்பு அதிகமானது.
நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 347ஆக உயர்ந்துள்ளது. 1400 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களுடைய குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்தோனேஷியா தீவின் வரைபடம் தொடர்பாக நாசாவும் கலிபோர்னியா டெக்னாலஜி நிறுவனமும் ஒன்று சேர்ந்து லாம்பொக்கின் டிஜிட்டல் மேப்பை ஆய்வு செய்ததில் இந்தோனோஷியா தீவு 25 சென்டிமீட்டர் அதாவது 10 இன்ச்சுகள் நகர்த்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நகர்வானது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,மேலும் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது நாசா.