விருத்தாசலத்தில் சாலையோரம் பிரியாணிக் கடை வைத்திருந்த இளைஞர்களிடம் அதிமுக கவுன்சிலர் ஒருவர் 100 ரூபாய் மாமூல் கேட்டு வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
விருத்தாசலத்தில் அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவர் அந்தப் பகுதியில் சாலையில் பிரியாணிக் கடை வைத்திருக்கும் இளைஞர்களிடம் 100 ரூபாய் மாமூல் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில் பிரியாணி கடை உரிமையாளரின் நண்பர் ஒருவர் அதிமுக கவுன்சிலரிடம் ''அண்ணா நானும் இந்த ஏரியாதான் அண்ணா. என் வண்டில பாருங்க நீதித்துறை'னு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும். நானும் அட்வகேட் தான். நான் வாடகைக்கு எடுத்து ஒரு மொபைல் கடை வெச்சிருக்கேன். அந்த கடைக்கே மாதம் 2,500 ரூபாய் தான் வாடகை. நீங்க தினமும் இங்க 100 ரூபாய் கேக்கறீங்க. மாதம் 3000 ரூபாய். அது இருந்தா ஏன் சாலை ஓரத்துல பிரியாணி கடை போடுறோம். கடைய வாடகைக்கு எடுக்க மாட்டோமா? எதுக்கு டெய்லி 100 ரூபாய் கேக்கறீங்க. எதுக்கு நாங்க காசு தரணும்'' என பேசியுள்ளார். அதிமுக கவுன்சிலர் ராஜேந்திரனும் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபடும் அந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.