
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திற்கு நடுவே சிக்கிக்கொண்ட இளைஞரை மீட்புப் படையினர் மீட்கப் போராடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிமங்கலத்தில் மணிமுத்தாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் இயற்கை உபாதைக்காகச் சென்ற பரத் என்கிற மாணவர் ஒருவர் சிக்கிக்கொண்ட நிலையில், ஒரு பாறையின் மேல் அந்த மாணவர் ஆபத்தான முறையில் நின்று கொண்டிருந்தார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தற்போது மீட்புப்படையினர் மாணவனை மீட்கப் போராடி வருகின்றனர்.
சூளாங்குறிச்சி மணிமுத்தாறு அணையில் முன்னறிவிப்பு இல்லாமல் 11 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதே இந்த வெள்ளப்பெருக்குக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது வெள்ளத்தின் நடுவில் சிக்கி நின்று கொண்டிருக்கும் இளைஞர் பரத்தை மீட்கும் பணி கடந்த இரண்டு மணி நேரமாக நடைபெற்று வருவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.