கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ.மாவிடந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய ஆண்டவர் கோயிலில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்ட பொதுமக்கள், கம்மாபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர், தூக்கில் பிணமாக இருந்த வாலிபரை இறக்கிவிட்டு. மேலும் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில் தூக்கில் தொங்கிய வாலிபர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராம்ராஜ் என்பதும், அவர் நெல் இயந்திர ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும் விருத்தாசலத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்ததும் தெரியவந்தது.
பின்னர் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காதலித்து திருமணமான ஆறு மாதத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து, கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.