Skip to main content

நகைக்காக பெண்ணை கொன்று புதைத்த இளம்பெண் – அதிர்ச்சியில் போலிஸ்

Published on 29/03/2018 | Edited on 29/03/2018

சாந்தி:

sn

திருவெறும்பூர் அருகே நகைக்காக பெல் ஊழியர் மனைவியைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்த பெண்ணை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். 

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மேலகுமரேசபுரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் நாதமணி (51). மத்திய அரசின் பெல் நிறுவன ஊழியர். இவரது மனைவி சாந்தி (48). இவர், தனியார் பேக்கரி குடோனில் உதவியாளராக இருந்தார். வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தவணை முறையில் புடவை, நைட்டி, ஜாக்கெட் உள்ளிட்டவை விற்று வந்தார். 

 

கடந்த 26ம் தேதி காலை வேலைக்கு சென்ற சாந்தி, மதியம் வீட்டுக்கு வந்தார். மதியத்துக்குமேல், துணி விற்பனைக்கான பணத்தை வசூலிக்க சென்றார். அதன் பின் சாந்தி வீடு திரும்ப வில்லை. சாந்தியை நாதமுனி பல இடங்களில் தேடினார். எங்கு தேடியும் காணவில்லை.

இதையடுத்து நாதமுனி, மறுநாள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். புகாரையடுத்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்தியை தேடி வந்தனர். 

 

விசாரணையில், கோனார் தெருவைச் சேர்ந்த ராமதுரையின் மனைவி பூங்குழலி மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, நேற்று காலை சந்தேகத்தின்பேரில் பூங்குழலியிடம் போலீசார் விசாரித்தனர். 

 

அப்போது, ஒருவித பயத்தில் உளறி பேசியதுடன், சாந்தியை கொன்று வீட்டில் புதைத்துவிட்டதாக கூறினார். 

பூங்குழலி:

kulal

விசாரணை குறித்து போலிஸ் பூங்குழலி அந்தப் பகுதியில் உள்ள ஒரு மகளிர் சுயஉதவி குழுவில் உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே கடன் வாங்கிய வகையில் சாந்திக்கு, பூங்குழலி ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டி இருந்தது. அதனை பலமுறை கேட்டும் பூங்குழலி கொடுக்கவில்லை. இதனால் பூங்குழலியை பலமுறை சாந்தி திட்டியுள்ளார். 26ம் தேதி பூங்குழலியிடம் பணம் கேட்க சென்றார். அப்போது வீட்டிற்குள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது ஆவேசமடைந்த பூங்குழலி வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து சாந்தி தலையில் அடித்தார். இதில் சம்பவயிடத்திலேயே சாந்தி இறந்தார். இதையடுத்து, சாந்தியின் உடலை மறைக்க திட்டமிட்டார். வீட்டின் கொல்லைபுறத்தில் இருந்த மரத்தை வேறோடு பிடுங்கி அந்த பள்ளத்தில் சாந்தி உடலை போட்டு மூடிவிட்டார். புதைப்பதற்கு முன் சாந்தி கழுத்தில் இருந்த செயின், தாலியை கழற்றி எடுத்து வைத்து கொண்டார். அதில் ஒரு செயினை அடகு கடையில் ரூ.30 ஆயிரத்திற்கு வைத்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சாந்தியின் உடலை தோண்டி எடுப்பதற்காக திருவெறும்பூர் தாசில்தார் ஷோபாவுக்கு தகவல் அளித்தனர். 

ஷோபா வந்தவுடன் அவர் முன்னிலையில் சாந்தியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதில் கொடுமை என்னவென்றால் 1 வருடத்திற்கு முன்பு சப்பானி என்பவர் நகைக்காக 8 பேரை கொலை செய்தார். அதில் இறந்த போன சாந்தியின் மாமியார் கோகிலா ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. ஒரே குடும்பத்தில் மாமியார், மருமகள் நகைக்காக கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. 

ஒரு பெண்ணை ஒரு பெண் கொலை செய்து புதைத்து இருப்பது போலிசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

கொலையாளி பூங்குழலி தொடர்பு எல்லாம் அந்த பகுதியில் திருட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அவருடைய கணவர் வெல்டர் சம்பவத்தன்று வெளியூருக்கு சென்றிருப்பதாலும் திருட்டு கும்பலுக்கு தொடர் அல்லது இந்த கொலைக்கு வேறுயாரும் உதவினார்களா என்கிற ரீதியில் போலிசார் இதுபற்றி தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்