மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இரவு உணவு விருந்து முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு சீன அதிபரை பிரதமர் மோடி மாமல்லபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார் பிறகு அவரும் கோவளம் புறப்பட்டு சென்றார்.
பின்னர், உணவு விருந்தில் என்னனென்ன சாப்பாடு சீன அதிபருக்கு பரிமாறப்பட்டது என்கிற மெனு வெளியானது. இரவு நடைபெற்ற இந்த விருந்தில் தென்னிந்திய உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. செட்டிநாடு, தஞ்சாவூர் என அந்தந்த ஊரின் பிரத்யேக உணவுகள் பரிமாறப்பட்டது. கேரளா, ஆந்திரா, தமிழகம் என தென்னிந்திய உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.
தமிழகத்தின் தக்காளி ரசம், கேரளாவின் குரும்பாடு வறுவல், தெங்காய் சில்லுடன் சமைக்கப்பட்ட மட்டன், தஞ்சாவூர் கோழி கறி, செட்டிநாடு வகை கரிவேப்பிலை மீன் வறுவல், இறைச்சி கெட்டி குழம்பு என்று பல உணவு வகைகள் பரிமாறப்பட்டது.