Published on 10/03/2022 | Edited on 10/03/2022

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா(25). இவருக்கு கடந்த 2016 நவம்பர் மாதம் பொன்னர் என்பவரோடு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக பொன்னர் மற்றும் லாவண்யா இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் லாவண்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் லாவண்யாவின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.