பங்களாதேசத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ரீபா (எ) ராணி(25). இந்த பெண் சிறுவயதிலேயே தன்னுடைய குடும்பத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கயுள்ளார். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்த ரீபா, ஒரு நபரை முழுமையாக நம்பி காதலித்துள்ளார். காதலன் வாழ்நாள் முழுவதும் தனக்கு துணையாக இருப்பான் என்று நம்பி, தன்னை அவனிடம் இழந்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகிய நிலையில், காதலன் இந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.
கை குழந்தையோடு தன் காதலனை தேடி அழைந்த ரீபா, ஒருநாள் பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, சில மர்ம நபர்கள் இவளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது கைகலப்பாக மாறி, இதில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ரீபா தனது காதலனை இந்தியாவின் பல இடங்களில் தேடியுள்ளார்.
இறுதியாக சேலம் வந்த ரீபா, கரூப்பூரில் இரவு நேரத்தில் தனது கணவனை தேடி அழைந்து கொண்டிருந்த போது, காவல்துறையினர் மீட்டு போதிமரம் ஆதரவற்ற பெண்கள் நல மையத்தில் சேர்த்துள்ளனர். இளம் வயதிலேயே வாழ்க்கையை இழந்து தவிக்கும் இந்த பெண் குறித்த செய்தி கரூப்பூர் பகுதி மக்களை வேதனையடையச் செய்துள்ளது.