Skip to main content

சென்னை புத்தக சங்கமத்தின் தொடரும் சாதனை

Published on 23/04/2018 | Edited on 24/04/2018
chennai

 

 சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆறாவது ஆண்டு புத்தகக் காட்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தரைத்தளம் மற்றும் கீழ்த்தளத்தை ஒருங்கே இணைக் கின்ற வகையில் 44 அரங்குகளைக் கொண்டு 20.4.2018 முதல் 25.4.2018 முடிய ஆறு நாள்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாள் (20.4.2018) மாலை புரட்சி இயக்குநர் பாரதிராஜா தொடக்கிவைத்தார். புத்தகச் சங்கமத்தில் சிறப்பு நிகழ்வுகளாக மாலை ஆறு மணிக்கு சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு உரையரங்கம் நடைபெற்று வருகிறது.

 

சென்னை புத்தக சங்கமத்தின் ஆறாவது ஆண்டு புத்தகக் காட்சியில் பல்வேறு பதிப்பகங்களின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவன வெளியீடுகளுக்கான அரங் கங்கள், ஊடகவியல் துறையினரின் பதிப்பக அரங்குகள், சமூகப்பிரச்சினைகளை படம்பிடித்துக்காட்டும் பல் வகை இலக்கியங்களைக் கொண்ட பதிப்பகங்களின் அரங்குகள், பக்தி இலக்கியங்கள், வரலாற்று நாவல்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், அறிவியல், இந்திய வரலாறிலிருந்து பன்னாட்டு வரலாறுகளைக் கொண்ட நூல்கள், கல்வித்துறைக்கான புத்தகங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி இலக்கியங்கள், கணினி அறிவியல் புத்தகங்கள் என பல்துறை புத்தகங்கள் சென்னை புத்தக சங்கமத்தின் ஆறாவது ஆண்டு புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ளன.

பகவத் கீதை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  எழுதிய கீதையின் மறுபக்கம், மனுதர்மம், சுவாமி சிவானந்த சரசுவதி எழுதிய ஞானசூரியன், குடிஅரசு தொகுதிகள், பெரியார் களஞ்சியம் தொகுதிகள், அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துகள், மனு தர்மம் தமிழாக்க புத்தகம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழி அகராதிகள், திருக்குறள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், மழலையருக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்த புத்தகங்கள் அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் அரங்குகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

 

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் எழுதிய நூல்கள், இலக்கியவாதிகள், பன்னாட்டளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், அறிவியலாளர்களின் நூல்கள் புத்தக அரங்குகளில் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன.  சிறீ அலமு புத்தக நிலையம், ஏசியன் புக் சென்டர், ஓம் ஜெயசக்தி புக் டிஸ்டிரிபியூட்டர்ஸ், சூர்யா, மதுமிதா புக்ஸ், ஈஸ்வர் புக் சென்டர், ஏ அண்ட் ஈ பப்ளிஷிங் ஹவுஸ், சந்தியா பதிப்பகம், வானவில் புத்தகாலயம், பாரி நிலையம், சித்திரா நிலையம், இந்தியா டுடே டி.எஸ்.டி, பாஸ்கர் புக் ஹவுஸ், உயிர்மை பதிப்பகம், ஹிக்கின் பாதம்ஸ் பிரைவேட் லிமிடெட்,, .சேகர் பதிப் பகம், அருவி வெளியீடு, நக்கீரன், இன்ஃபோ மீடியா, புக் வேர்ல்டு, புதிய வாழ்வியல், ஏ.என்.ஏ புக்ஸ், அதிதன் புக்ஸ், தியாகராயர் நகர், லோட்டஸ் மல்டி மீடியா, முன்னேற்றப் பதிப்பகம், ஓம் சக்தி புக்ஸ் இன்டர்நேஷனல், கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், புதுப்புனல், விழிகள் பதிப்பகம், பூம்புகார் பதிப்பகம்,  சிறீபாலகங்கை பப்ளிகேஷன்ஸ், புக் வேர்ல்ட் லைப்ரரி, நடராஜ் பப்ளிகேஷன்ஸ், கீதா புக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் சார்பில் புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்புப் புத்தகக் காட்சியில் அனைத்து புத்தகங்களும் 50 விழுக்காடு தள்ளுபடியில் அளிக்கப்படுகின்றன. பார்வையாளர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் நாள்தோறும் குலுக்கல் முறையில் வாசகப் பார்வை யாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, எஸ்.எம்.சில்க்ஸ் வழங்கும் புடவை, பவார் லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் சார்பில் செல்பேசி மற்றும் 15வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.


குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் 3ஆம் நாளான நேற்று ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. சென்னை புத்தக சங்கமத்தின் புத்தகக் காட்சியின் மூன்றாம் நாளான நேற்று (22.4.2018) மாலை 6 மணி யளவில் 'இளைஞர்களும் வாசிப்பும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

 

எமரால்டு பப்ளிஷர்ஸ் கோ.ஒளிவண்ணன், கட்டுரை யாளர் ஜெ.தீபலஷ்மி, எஸ்.சிவக்குமார், வழக் குரைஞர் பி.வி.எஸ்.கிரிதர், ஜெயநாதன் கருணாநிதி ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியை புக் கிளப் ஆப் இந்தியா என்ற அமைப்பு ஒருங்கிணைத் தது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவருக்கும் இயக்க வெளியீடுகள் வழங்கி சிறப்பு செய்தார்.

 

கடுமையான வெயில் வெளியில் இருந்தாலும், சென்னை புத்தகக் காட்சி அரங்குகள் முழுவதுமாக குளி ரூட்டப்பட்டு இருப்பதால் வாசகர்கள், பார்வையாளர்கள் சோர்வின்றி புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். வாச கர்கள் பெரிதும் குடும்பத்துடன் வருகை தருகிறார்கள். புதிதாக வருகைதருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.