Skip to main content

மகள் கர்ப்பமாக இருக்கிறாள்... அதிர்ச்சி கொடுத்த பெண்ணின் பெற்றோர்... பரபரப்பு பின்னணி தகவல்!

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

தனது மகள் பழகிய மருத்துவரிடம் அந்த பெண்ணின் பெற்றோரே பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூர் மாநிலத்தைச் சேர்ந்த லீனா கவிதா,பிரமோத் குமார் இந்த தம்பதிக்கு ஒரு பிரகதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். பிரகதி சமூக வலைத்தளம் மூலம் ஒரு நபரிடம் நட்பாக பேசியுள்ளார். அவர் அங்கு இருக்கும் மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இருவரும் ஆன்லைன்ல பேச தொடங்கிய நாளில் முதலில் நட்பாக பேசியுள்ளனர். பின்பு இவர்களது நட்பு நெருங்கி பழகும் அளவிற்கு சென்றுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி அதிகம் நெருக்கமாகியுள்ளனர்.  இதனால் இருவரும் வெளியே தனியாக சென்று ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்த தகவலை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் தெரிந்து அந்த ஹோட்டலில் தங்கி இருந்த மகளையும் அவரது ஆண் நண்பரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். 

 

incident



அதன் பின்பு அந்த மருத்துவரிடம் அவர்களது வீட்டு முகவரியையும், மொபைல் நம்பரையும் அந்த பெண்ணின் பெற்றோர் வாங்கியுள்ளனர். பின்பு சில நாட்கள் கழித்து அந்த ஆண் நண்பரின் பெற்றோருக்கு கால் செய்து உங்களது மகனும், எனது மகளும் நெருங்கி பழகியுள்ளனர். அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ எங்களிடம் உள்ளது. இந்த வீடியோவை வெளியில் விடாமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்று அந்த மருத்துவரின் தாயார் ஆஷலதாவிடம் கூறியுள்ளனர். மேலும் நீங்கள் பணம் கொடுத்தால் இந்த பிரச்சனையை முடித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அப்படி பணம் தரவில்லை என்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். மேலும் போலீஸாரிடம் புகார் கூறுவோம் என்றும் பயமுறுத்தியுள்ளனர். இந்த விஷயத்தை கேட்ட அந்த டாக்டரின் தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு அந்த டாக்டரின் தாயார் ஆஷலதா அந்தப்பெண்ணின் தாயாரான லீனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அந்த பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி தகவலை கொடுத்தனர். அதில் எங்கள் மகள் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர். 


இதில் பயந்து போன அந்த டாக்டரின் தாயார் பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று 20 இலட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் அடுத்த நாளே அந்த பெண்ணின் பெற்றோர் ஆஷலதாவிற்கு போன் செய்து மகளின் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதற்கு மேலும் 20 இலட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஆஷலதாவும் 20 இலட்சம் ரூபாயை மீணடும் கொடுத்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து பணம் கேட்டு லீனா தம்பதி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஷலதா, அந்த பெண்ணின் பெற்றோர் ஏமாற்றி பணம் வாங்குகின்றனர் என்று தெரிந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த மருத்துவரின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லீனா அவரது கணவர் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்