Skip to main content

 யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

You Tube whipped on Thuraimurugan is a thug act!

 

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்துள்ளது.  

 

ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் கடந்த மாதம் அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியின் உணவைச் சாப்பிட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் பின்னர் குணமடைந்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக யூ டியூபர் சாட்டை துரைமுருகன், கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதியன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார். 

 

அவர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் திருவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி சாட்டை துரைமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் பரிந்துரைத்தார். அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சாட்டை துரைமுருகன் திருவள்ளூர் கிளைச் சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். 


 

சார்ந்த செய்திகள்