Published on 23/08/2020 | Edited on 23/08/2020

தமிழகம் முழுவதும் நேற்று (22/08/2020) ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 250.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூபாய் 52.45 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூபாய் 51.27 கோடி, சென்னை மண்டலம் ரூபாய் 50.65 கோடி, சேலம் மண்டலம் ரூபாய் 49.30 கோடி, கோவை மண்டலம் ரூபாய் 46.58 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
கடந்த வாரம் ரூபாய் 248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூபாய் 250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
இன்று பொது முடக்கம் என்பதால் நேற்று (22/08/2020) அதிகளவில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.