கொட்டும் மழையில் பெண்களின் எழுச்சிப் பேரணி
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாட்டுப்பேரணி கொட்டும் மழையில் பெண்களின் எழுச்சிமிகு அணிவருப்புடன் புதுக்கோட்டையில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது.
ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 12-ஆவது மாநாடு புதுக்கோட்டை எஸ்விஎஸ் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்று வருகிறது. மாநாட்டையொட்டி வியாழக்கிழமையன்று பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து கொட்டும் மழையில் ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களின் எழுச்சிமிகு அணிவகுப்புடன் நடைபெற்ற பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சாந்தநாதபுரத்தில் நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுசீலா தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், மாநில துணைத் தலைவர் ஜி.கலைச்செல்வி, மாநிலச் செயலாளர் ஆர்.ராதிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் டி.சலோமி, உழைக்கும்பெண்கள் ஒருங்கிணைப்புகுழு அமைப்பாளர் என்.கண்ணம்மாள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ராணி, டி.அஞ்சலை, எஸ்.சரோஜா, ஆர்.சாந்தி, வி.வெள்ளையம்மாள் உள்ளிட்டோர் பேசினர்.
பகத்சிங்