Skip to main content

மகளிர் உரிமைத்தொகை குறித்து புதிய அறிவிப்பு

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Women  stipend will be paid on 15th of every month

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள ரூ.1 கோடி மகளிரின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இதற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு வந்தாலும், ஒரு சிலர் தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று கூறி சில இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். 

 

இதனைத் தொடர்ந்து, அக்.18 ஆம் தேதிக்குள் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி விண்ணப்பிக்க தவறியவர்கள் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகையின் இரண்டாவது மாத உரிமைத்தொகை வரும் 14 ஆம் தேதி அனைத்து மகளிரின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

மேலும் மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், இந்த மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், அதற்கு முதல் நாளான 14 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்