Published on 24/08/2021 | Edited on 24/08/2021

வேலுார் மாவட்டம், பாகாயம் போலீசார் இன்று காலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது எம்.ஜி.ஆர். நகரில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற இரண்டு பெண்களை பிடித்து விசாரித்ததாகவும், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான மகேஸ்வரி, 27 வயதான பவியாஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளதும், வேலை கிடைக்காததால் கஞ்சா விற்று பிழைத்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது யார்? இவர்களின் கஸ்டமர்கள் யார், யார்? எத்தனை ஆண்டுகளாக விற்பனை செய்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இளம்பெண்களின் பின்னால் உள்ள கும்பலை பிடிக்கவும் போலீஸார் தீவிரம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.