Skip to main content

வில்சன் கொலை வழக்கு... கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! 

Published on 20/01/2021 | Edited on 20/01/2021
wilson case nia in kovai

 

கடந்த வருடம் ஜனவரி மாதம் 8-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை அப்துல்சமீம், தவ்பீக் ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

 

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வில்சன் கொலை தொடர்பாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த சிஹாபுதீன் என்ற நபரை, விமான நிலையத்தில் வைத்து கடந்த 6-ஆம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிஹாபுதீன் இல்லத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை போத்தனூரில் உள்ள அவரின் இல்லத்திற்கு சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள் தற்பொழுது  சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்