அண்மையில் தூத்துக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பால் மட்டுமல்லாது ஆவின் நெய் உட்பட பால் உப பொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மூன்று நாட்களுக்கு மேலாக ஆவினின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விற்பனைக்கு வரவில்லை என புகார் எழுந்துள்ளது.
அதே நேரம் ஒரு லிட்டர் பாலுக்கு ஏழு ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என மதுரை ஆவின் நிர்வாகத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தவறினால் மார்ச் 11 முதல் பால் வழங்குவது நிறுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.