வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி,
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். லக்னோ மக்களவைத் தொகுதியில் ராஜ்நாத்சிங் போட்டியிடுகிறார். அதேபோல் நாக்பூரில் நிதின் கட்கரியும், காசியாபாத் தொகுதியில் விகே.சிங் போட்டியிடுகிறார். அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். ஜெய்ப்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் போட்டியிடுகிறார்.
அதேபோல் தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது அந்த பட்டியலில்,
குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகின்றனர். கோவையில் சிபி ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நாகேந்திரன் போட்டியிடுகிறார்கள். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் எச் ராஜா போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.