கீரமங்கலம் பயிரிடுவோர் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டது. அனால் மனுக்கள் பரிசீலணை, இறுதிபட்டியல் வெளியீடு, தேர்தல் எதுவும் நடத்தப்படவில்லை.
துமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய இயக்கநர்கள் தேர்வு செய்வதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. பல இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வேட்பு மனுக்களை வாங்குவதில்லை என்ற புகார் எழுந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்க போடப்பட்டு விசாரனை நடந்து வருகிறது. இருந்தும் தேர்தல் நடத்தலாம் முடிவுகளை அறிவிக்க கூடாது என்று நீதிமன்றம் தடைவிதிதுள்ளது. இந்த நிலையில் பல ஊர்களில் தேர்தல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கம், கீரமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வேட்பு மனு வாங்கியதுடன் மனுக்கள் பரிசீலனை, இறுதிப்பட்டியல் வெளியிடவும் தேர்தல் நடத்தும் அதிகாரி வரவில்லை என்று அலுவலகங்களை பூட்டியும், உள்ளிருப்பு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுடன் மாவட்ட அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் 30 ந் தேதி கீரமங்கலம் பயிரிடுவோர் கூட்டுறவு சங்கத்திற்கு வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டது. சுமார் 30 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் மதியத்துடன் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டதால் வேட்பு மனு கொடுக்க வந்த பலரும் ஏமாற்றத்துடன் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை செய்யவும் வாபஸ் பெறும் நாள் மற்றும் இறுதிப்பட்டியல் வெளியிடலும் தேர்தல் அதிகாரி வரவில்லை.
அதனால் வேட்பு மனு தாக்கல் செய்த பலரும் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று திரும்பினார்கள். மேலும் 7 ந் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் பல உறுப்பினர்கள் தேர்தல் நடக்கும் என்று வந்து தேர்தல் அதிகாரி வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் கீரமங்கலம், கொத்தமங்கலம் கூட்டுறவு சங்கங்களுக்கு எப்போது பரிசீலனை, வாபஸ், இறுதிப்பட்டியல் வெளியீடு, தேர்தல் என்பதை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.