Skip to main content

தற்கொலை செய்து கொள்வேன்: கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை ஏற்படுத்திய பரபரப்பு

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
தற்கொலை செய்து கொள்வேன்: கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கை ஏற்படுத்திய பரபரப்பு



இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் நஸ்ரியா பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். சமீபத்தில் நடந்த சீருடை பணியாளர்கள் தேர்வில் வெற்றி பெற்றார். கடந்த ஜீலை 31ல் பெண்கள் பிரிவில் பங்கேற்க்க அழைக்கப்பட்டார். அவரிடம் திருநங்கை என்பதற்கான அடையாள அட்டை இல்லாததால் அவரை அதிகாரிகள் மூன்றாம் பாலினமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகம் வந்த திருநங்கை நஸ்ரியா சமூகநலத்துறையில் பலமுறை மனுகொடுத்தும் நான் முறையாக அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறிவிட்டேன். அதற்க்கான மருத்துவ சான்றிதழையும் அளித்துள்ளேன். ஆனாலும் எனக்கு அடையாள அட்டை வழங்க மறுக்கின்றனர். சமூக நலத்துறையிலிருந்து அடையாள அட்டை வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறவழியில்லை என்றார்.

இதையடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் நஸ்ரியாவுக்கு திருநங்கைக்கான அடையாள அட்டை வழங்கினார்.

பாலாஜி.

சார்ந்த செய்திகள்